நான் ஏன் கடவுளை நம்புகிறேன் தெரியுமா?

நான் ஏன் கடவுளை நம்புகிறேன் தெரியுமா? அதற்கு ஏழு காரணங்கள் இருக்கின்றன. இப்படிச் சொல்பவர் யார் தெரியுமா? சாதாரண மனிதரல்ல அவர். எதையும் ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக்கொள்ளும் ஒரு விஞ்ஞானி.

மேல்நாட்டு விஞ்ஞானியான ஏ.கி.ரெஸ்லிமாரிஸன் எழுதியுள்ள, ‘மனிதன் தனித்து நிற்கவில்லை’ (Man Does Not Stand Alone) என்ற நூலில்தான், தாம் கடவுளை நம்புவதற்குரிய ஏழு காரணங்களைக் கூறுகிறார்.

விஞ்ஞான யுகத்தின் தலைவாசலில் நிற்கும் நமக்கு, ஒவ்வொரு புதுமைக் கண்டுபிடிப்பின் போதும், உலகைப் படைத்த ஞானசக்தியின் கைத்திறன் ஆச்சரியமளிக்கிறது!

என்னைப் பொருத்தவரை நான் கடவுளை நம்புவதற்கு ஏழு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.

ஒன்று: மகத்தான எஞ்சினீயரிங் ஞான சக்தி ஒன்று தான் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்திருக்கிறது. மறுக்க இயலாத கணித விதிகளின் மூலம் இதை நாம் நிரூபிக்க முடியும்.

பத்து ஒரு ரூபாய் நாணயங்களை ஒன்று, இரண்டு, மூன்று, இப்படியே பத்து வரைக்கும் குறி இட்டு உங்கள் சட்டைப் பையிலே போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஜேபியை நன்றாகக் குலுக்கி விடுகிறீர்கள். இப்போது ஒன்று முதல் பத்து வரைக்கும் தொடர்ச்சி மாறாமல், அத்தனைக் காசுகளையும் வெளியே எடுக்க முயலுங்கள். திரும்பத் திரும்பக் காசுகளை சட்டைப் பைக்குள் போட்டுக் குலுக்கி வரிசை கெடாமல் எடுக்க முயன்று கொண்டேயிருங்கள்.

முதல் நம்பர் காசை முதலில் எடுக்கக் கூடிய சான்ஸ், பத்தில் ஒன்று. முதலில், முதல் நம்பர், அடுத்தபடி இரண்டாம் நம்பர் என்ற வரிசையில் எடுக்கக் கூடிய சான்ஸ் நூற்றில் ஒன்று. வரிசைக் கிரமமாக மூன்று நம்பர் காசுகளை எடுக்கக் கூடிய சான்ஸ் ஆயிரத்தில் ஒன்று! ஒன்று முதல் பத்து எண் வரைக்கும் காசுகளை வரிசை பிறழாமல் எடுக்கக் கூடிய சான்ஸ் என்ன தெரியுமோ? ஆயிரம் கோடி முறை முயன்றீர்களானால் ஒரே ஒரு தடவைதான் அப்படிப் பலிக்கக் கூடும். இந்த வாய்ப்பை நாம் கணித ரீதியாக அறிவோம்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், ஒன்று நமக்கு விளங்குகிறது: பூமியிலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்




நிலைமைகள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சரியான தொடர்பு பெற்றிருக்க வேண்டியுள்ளது. அவை எல்லாம் வெறும் சான்ஸாகத் தோன்றியிருப்பது சாத்தியம் இல்லை. மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை விட்டு மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அது சுற்றுமானால் நம்முடைய பகலும் இரவும் இப்போது இருப்பதைப் போல் பத்து மடங்கு நீளம் ஆகிவிடும். அப்போது நம் பயிர் பச்சைகளை எல்லாம் ஒரே பகலில் சூரிய உஷ்ணம் எரித்து விடும். அதில் மிஞ்சியவை எல்லாம் அடுத்து வரும் இரவிலே விறைத்து உறைந்து விடும்.

மீண்டும் பார்ப்போம். சூரியன் தான் நம் உயிர்களுக்கெல்லாம் மூலாதாரம். அதன் மேற்பரப்பு உஷ்ணம் 12,000 டிகிரி பாரன்ஹீட். அந்தச் சூரியனிடமிருந்து ஏற்ற தூரத்தில் இருக்கிறது நமது பூமி. அந்த ‘நிரந்தரத் தீ’ நமக்குப் போதிய அளவு வெப்பத்தை மிக மிகக் கணக்காகக் கொடுக்கிறது அதிகமோ குறைவோ இல்லை. சூரியனிடமிருந்து இப்போது நமக்கு வரும் உஷ்ணத்தில் பாதி மட்டும் வருமானால், நாம் குளிர்ந்து உறைந்து போவோம். இரண்டு மடங்கு வருமானால் எரிந்து சாம்பலாவோம்.

பூமி இரண்டு மடங்கு சாய்ந்திருப்பதாலேயே, பருவ மாறுதல்கள் நிகழ்கின்றன. இப்படி அது சாய்ந்திராவிட்டால், கடலிலிருந்து எழும் நீராவி வடக்கிலும் தெற்கிலும் சென்று, கண்டங்களையெல்லாம் பனிக்கட்டி மயமாக்கி விடும். நம் சந்திரன் இப்போதுள்ள துரத்தை விட்டு நெருங்கி ஐம்பதாயிரம் மைல் தூரத்தில் வந்து இருக்குமானால், கடலில் ‘டைடு’ என்ற அலை எழுச்சி பிரமாண்டமாயிருக்கும்; அதனால், ஒரு நாளில் இரண்டு முறை நம் கண்டங்களெல்லாம் முழுகிவிடும். மலைகள் கூட வெகு விரைவில் கரைந்து போகும்.

பூமியின் ‘க்ரஸ்ட்’ என்ற மேற்படலம், பத்தடி பருமன் மட்டுமே இருக்குமானால், ‘ஆக்ஸிஜன்’ இருக்காது. ஆக்ஸிஜன் இல்லா விட்டால் உயிரினங்கள் எல்லாம் செத்தொழிய வேண்டியதுதான்.

கடல் இன்னும் சில அடிகள் ஆழமாயிருக்குமானால், ‘கார்பன் டை ஆக்ஸைடையும் ஆக்ஸிஜனையும் கடல் நீர் இழுத்துக் கொண்டிருக்கும்; எந்தத் தாவரமும் உயிர் வாழாது. ஆகாயம் இப்போது இருப்பதை விட மெலிந்து இருந்தால், இப்போது ஆகாய வெளியிலேயே தினமும் எரிந்து போகும். ‘மீட்டியர்’ என்ற விண் கற்களில் பல, தரையில் வந்து மோதி, தீ விபத்துகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்.

இவை மாதிரி இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம் பூமியில் உயிர்கள் தோன்றியது, கோடி கோடியில் ஒரு சான்ஸ் என்ற முறையில் கூட தற்செயலான சம்பவம் அல்ல.

இரண்டு: உயிர், தன் காரியத்தை எப்படியோ சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருக்கிறது. ஏதோ ஒரு ஞானசக்தி எங்கும் பரவிக் கிடக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.

ஆனால், உயிர் என்பது என்ன? அதைக் கண்டுபிடித்த மனிதர் யாரும் இல்லை. உயிருக்கு எடை இல்லை; பரிமாணம் இல்லை. ஆனால், வலு (ஃபோர்ஸ்) இருக்கிறது. நீரையும் நிலத்தையும் காற்றையும் அது வென்று விடுகிறது. ‘எலிமெண்ட்ஸ்’ என்ற மூலப் பொருள்களை எல்லாம் உயிர் ஆட்டி வைக்கிறது. அவற்றை அது கரையச் செய்கிறது; கரைந்தவற்றைக் கூட்டிப் புதுப் பொருள்களை அமைக்கிறது.

உயிர் ஒரு சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உருக் கொடுக்கிறது. ஓவியனைப் போல், ஒவ்வொரு மரத்தின் ஒவ்வோர் இலைகளையும் சித்திரித்து வர்ணம் தீட்டுகிறது. உயிர் ஒரு சங்கீத வித்வான். அது ஒவ்வொரு பறவைக்கும் காதல் கீதம் இசைக்கப் போதித்து விடுகிறது; பூச்சிகளின் எண்ணற்ற ஒலிகளுக்கிடையே ஒவ்வொரு சிறு பூச்சியும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு பூச்சியைக் கீத ஒலியால் அழைக்க அது கற்றுக் கொடுக்கிறது. உயிர் ஓர் உன்னத வேதியியல் நிபுணன். அது காய், கனி உள்ளிட்டவைகளுக்கு சுவை ஊட்டுகிறது. மலர்களுக்கு மணம் கொடுக்கிறது. மரங்கள் மூலம் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி உயிரினங்கள் சுவாசிக்க வகை செய்கிறது. இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை தருவது உயிரே. ஒரு ‘செல்’ என்பது கண்ணுக்குப் புலனாகாத நுண்மையானது. இது தன்னுள்ளே உயிரின் ‘ஜெர்ம்’ என்ற மூளையை அடக்கிக் கொண்டிருக்கிறது. பெரிதும் சிறிதுமான சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுப்பது இதுவே. அனைத்து தாவரங்களையும், பிராணிகளையும் மனிதர்களையும் விட, இந்த ஒரு செல் ‘அணு’வின் சக்தியே மிகப் பெரியதாகும். ஏனெனில், சகல ஜீவன்களும் இந்த அணுவிலிருந்தே தோன்றியிருக்கின்றன.

இயற்கை, உயிரைப் படைக்கவில்லை. தீப் பிழம்பான குன்றுகளும், உப்பில்லாக் கடலுமாக இருந்த இயற்கை, உயிரைப் படைக்க ஏற்றதல்ல.
அப்படியிருக்க, உயிர் தோன்றிவிட்டதே
Keine Posts
Keine Posts